புதிய அரசியலமைப்புக்கு, மக்களின் கருத்துகளை அறிவதற்காகக் கொழும்பில் இடம்பெற்ற முதற்கட்ட அமர்வில், தமிழர்கள் இருவர் மாத்திரமே கருத்துரைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு, பெரும்பான்மையின மக்களே அதிக ஆர்வத்துடன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்றும், கொழும்பில் இடம்பெற்ற அமர்வில், தமிழ்மொழி பேசுவோர், ஆர்வம் காட்டவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன. வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவருமே கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.