தமிழ் அடியான்

சாவகச்சேரி வைத்தியசாலை “புரட்சி” யின் பின்னர் பலர் அர்சச்சுனாவை ஆதரித்ததை போல தானும் ஆதரிக்க தொடங்கினேன் என காணொளி வெளியிட்டிருந்தார் தமிழ் அடியான்.

அதற்கு்முன் அர்ச்சுனா என்ற பெயரையே கேள்விப்படாதது போல் கூறியிருந்தார்.

உண்மை என்னவெனில் டாக்டர் அர்ச்சுனாவின் குடும்பத்துடன் 10 வருடங்களுக்கு மேலாக நெருங்கிய நட்புடன் இருந்திருக்கின்றார் தமிழடியான்.

அர்ச்சுனாவின் அண்ணனான ரகுராமிற்கு பிரான்ஸ் நாட்டில் சொந்தமான Raguram International என்ற பணமாற்று சேவை , உண்டியலில் பணம் அனுப்பும் International Money Transfer Services ல் இரண்டு வருடங்கள் மேலாக தமிழ் அடியான் என்பவர் Marketing Assistant ஆக வேலை செய்து வந்தார்.

பின் அங்கு ஏதோ “சில பிரச்சனைகளில்” மாட்டி அதில் இருந்து தப்புவதற்காக United Kingdom ஓடிவந்தார் என அறியப்படுகிறது.

இதன் மூலம்தமிழ் அடியான் டாக்டர் அர்ச்சுனாவின் குடும்பத்துடன் பல வருடங்களாக மிக நெருங்கிய நட்புடன் இருந்திருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது.

டாக்டர் அர்ச்சுனாவின் அரசியல் பிரவேசம் முன்னரே நன்கு திட்டமிடப்பட்டது, அவரின் அரசியல் பிரவேசத்திற்கு ஊதுகுழலாக ஒரு ஊடகம் தேவை தானே?
அதற்காக உருவாக்ப்பட்டதே இந்த “தமிழ் அடியான்” என்ற YouTube Channel.

இவர்கள் ஒரு மிகப்பெரிய Syndicate. அரசியல் ஆதாயத்திற்காக பண ஆதாயம் போன்றனவற்றிக்காக தொடங்கப்பட்ட ஒரு Criminal Organisation.

தற்சமயம் Raguram International பிரான்ஸ் அரசால் மூடப்பட்டுள்ளது.

இவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் பணம் அனுப்பும் வேலைகளில் அதாவது Money Laundering போன்ற சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டதால் இந்நிறுவனம் முற்றாக மூடப்பட்டு தற்சமயம் Sageetha Ramanathan அல்லது Sugeerthana International என பெயர் மாற்றி இயங்கி கொண்டிருக்கின்றது.

இந்த நிறைவனம் சம்மந்தமாக 2019ம் ஆண்டு வந்த அறிக்கையின் தமிழாக்கம் கீழ் வருமாறு…

“2019 ஏப்ரல் 8ஆம் தேதி முடிவு – ரகுராம் இன்டர்நேஷனல் – கைமாற்ற நாணய மாற்றுவோரின் பட்டியலில் இருந்து நீக்கம்

ரகுராம் இன்டர்நேஷனல் (இனிவரும் “ரகுராம்”) நிறுவனத்தின் பணம் மோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு (AML-CTF) அமைப்பு குறித்த நேரடி பரிசோதனைக்கு பிறகு, 2018 ஜூலை மாதத்தில் ஒழுங்குமுறை நடவடிக்கை தொடங்கப்பட்டது. கைமாற்ற நாணய மாற்றம் (Manual Currency Exchange) மேற்கொண்ட ஒரு கேள்விபடத்தக்க தனியார் நிறுவனம் எனக் கருதப்பட்ட இந்த நிறுவனம், முக்கியமான சட்டப்பூர்வக் கடமைகளில் பலவற்றை மீறியதாக கண்டறியப்பட்டது.

தண்டனை ஆணையம் (Sanctions Commission) மேற்கொண்ட பரிசோதனைக்கேற்ப, ரகுராம் தனது AML-CTF விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. குறிப்பாக, €1,000-க்கு மேற்பட்ட நாணய மாற்றப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சீரற்ற வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் நிறுவனம் முறையாக செயல்படவில்லை.

மேலும், சாதாரணம் இல்லாத அளவுக்கு அதிக தொகையிலான பரிவர்த்தனைகள் எவ்வித கூடுதல் பரிசோதனையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டன. இது, வாடிக்கையாளர் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான குறைந்த தகவல்களுடன் நடைமுறையில் இருந்து வந்தது. அதோடு, அவரசமாக சொத்து முடக்க (Asset Freeze) விதிக்கப்பட்டுள்ள நபர்களை அடையாளம் காணும் எந்த ஒரு அமைப்பும் ரகுராமிடம் இல்லை.

மொத்தத்தில், ரகுராம் நிறுவனம் AML-CTF விதிகளை முறையாக செயல்படுத்தத் தவறியது என்பது தண்டனை ஆணையத்தின் மதிப்பீடு. கைமாற்ற நாணய மாற்ற வர்த்தகம் பணமோசடிக்கு அதிகம் உள்ளான ஒரு துறை என்பதால், இந்த மீறல்கள் கவலைக்குரியவை. மேலும், நிறுவனம் பரிந்துரைத்த திருத்த நடவடிக்கைகள் தாமதமானவை மற்றும் போதுமானவை அல்ல என்று தீர்மானிக்கப்பட்டது.

இதனால், ரகுராம் இன்டர்நேஷனல் கைமாற்ற நாணய மாற்றுவோரின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

மக்களே விழித்துக் கொள்ளுங்கள்

Leave a Reply