உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததை நாங்கள் அறிந்தோம். யுத்தத்தின் போது இலங்கையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அத்துடன் இலங்கை ஆயுதப்படைகள் தமிழ் இன மக்களுடன் போரில் ஈடுபடவில்லை. எனவே கனேடிய பிரதமரின் கருத்து கண்டிக்கப்பட வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன்”, என அவர் தெரிவித்தார்.
கனேடிய பிரதமரின் கருத்துக்கு இலங்கை தனது கண்டனத்தை அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம், கனேடிய பிரதமர் அண்மையில் ஆற்றிய உரைக்கு இலங்கை அரசாங்கத்தின் கண்டனத்தைப் பதிவு செய்தார்.