ஆப்கான் பெண்களிடம் நான் பேசியதிலிருந்து உண்மையில் அதிர்ச்சிகரமான தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. அவர்களைப்பற்றி நீங்கள் புத்தகங்களில் மட்டுமே படித்திருப்பீர்கள்.
தலிபான்கள் பெண்களுக்கு கல்வி வழங்குவதாக கூறிய போதிலும் அவர்களை நம்ப முடியாமல் இருப்பதற்குக் காரணம் அவர்களின் செயல்பாடுகள் அவர்களின் பேச்சிலிருந்து வேறுபட்டு இருப்பதேயாகும் என்று தெரிவிக்கப்படுவதாக டொக்டர் கோஹெல் என்பவர் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 15 இல் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றினார்கள். அதனையடுத்து ஜனாதிபதி அஷ்ரப் கானி பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார். தலிபான் போராளிகள் நகரைக் கைப்பற்றி இருப்பதனால் அங்கு இரத்த ஆறு ஓடுவதை தடுக்கும் வகையிலேயே இவ்வாறு பதவியிலிருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார்.
பல நாடுகளும் தலிபான்கள் நாட்டை கைப்பற்றியதிலிருந்து தமது பிரஜைகள், இராஜதந்திரிகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றன. இதேவேளை காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் தலிபான்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன