பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவருக்குமிடையிலான இருதரப்பு சந்திப்பில் சிரிங்லா, ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் பங்களிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு தலைவர்களும் தம் கவலையை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தொடர்பாக இந்தியாவின் தலைமையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா.தீர்மானம் 2593 மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆப்கானிஸ்தானின் நிலைமை பற்றிய சர்வதேசத்தின் பொதுவான பார்வையிலும் பிரதிபலித்தது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடவேண்டிய முக்கியத்துவத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டியது.
ஆப்கானிஸ்தான் பிரதேசம் எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ, தாக்கவோ அல்லது பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடம் அளிக்கவோ, பயிற்சி அளிக்கவோ பன்படுத்தப்படமாட்டாது என்பவற்றை உறுதி செய்யும் தீர்மானங்களை உள்ளடக்கிய ஐ.நா. தீர்மானம் 2593ஐ தலிபான்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலையைப் பார்க்கையில் தலிபான்கள் இவற்றைப் பின்பற்றி நடப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் பைடன், பிரதமர் மோடியை முதல் பிரமுகராக இருதரப்பு சந்திப்புக்கு அழைத்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் தொடர்பான பாகிஸ்தானின் பங்களிப்பிலும், ஆப்கானிஸ்தான் எவ்வாறு இருக்கவேண்டும் என்னும் சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு உட்படாத ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை தொடர்வதிலும் ஒரு தெளிவான கவலை வெளிப்பாடு இருப்பதாக நினைக்கிறேன் என்றும் வெளியுறவு செயலாளர் கூறினார்.
பிரதமர் மோடி அண்மையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.