தாஜுடீன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கென பார்க் வீதியிலுள்ள டக்ளஸ் தேவானாந்தாவின் கட்சி அலுவலக சி சி ரி வி காணொளிகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் தாஜுடீன் கொலை வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி நிஷாந்த பிரீஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாஜுடீன் கொலை வழக்கின் விசாரணைகளுக்கென 2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பதிவான டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அலுவலக சி சி ரி வி காணொளிகளை வழங்க வேண்டும் என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.
பார்க் வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் அலுவலகத்தில் பதிவாகியிருந்த காட்சிகளே இவ்வாறு கோரப்பட்டுள்ளது. கணனி ஹார்ட் டிஸ்கில் காணப்படும் காட்சிகளே இவ்வாறு கோரப்பட்டுள்ளன. குறித்த காட்சிகளை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக தேவானந்தா சமர்ப்பிக்க உள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவினை தேவானந்தாவிற்கு உத்தரவிட்டுள்ளது. வசீம் தாஜூடீனின் சடலம் 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் ஈ.பி.டி.பி. அலுவலகமொன்றிலும் சீ.சீ.ரீ.வி. கமரா காட்சிகள் பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் பற்றியே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த காணொளியை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உத்தரவிட்டுள்ளது.