தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதன் அடிப்படையில் இப்பதவி நீக்க உத்தரவு வழங்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற நாட்டின் பிரபலமான முற்போக்கு மூவ் ஃபார்வர்ட்  கட்சியை நீதிமன்றம் கலைத்து, அதன் தலைவர்களை 10 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து தடை செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது