திங்களன்று புதிய அமைச்சரவை நியமனம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் திங்கட்கிழமை (18) நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி 25 பேருக்கும் குறைவான அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.