இந்தியாவில் படுகொலைசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உட்பட படுகொலைசெய்யப்பட்ட உறுப்பினர்களின் தியாகிகள் தினம் மட்டக்களப்பில் திங்கட்கிழமை (19) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனையில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


