அதன் நடவடிக்கை தொடர்பாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆனணயாளர். மொத்த மீன் சந்தை விடையாமாக எழுத்து மூலம் தனக்கு தெரிவிக்குமாறு நகர சபை செயலாளர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். எனக்கு அதன் பிரதி ஒன்றும் அனுப்பி வைத்துள்ளார். இனிமேல் தான் நடவடிக்கை எடுக்கப்பட போகிறது என்பதை இக் கடிதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உண்ணாவிரதத்தின் முதல் வெற்றி இது. 16/2/2021 அன்று நகரசபை கூட்டத்தில் எனது பேச்சு நேரத்தின் போது நகர சபை தலைவரிடம் கேட்க பட்ட கேள்வி மொத்த மீன் சந்தை வரி பணம் எப்போது பெற்று கொள்ள முடியும்.
கால அவகாசம் கூறும்படி கேட்டேன். அதற்கு தலைவர் கால அவகாசம் கூற முடியாது முயற்சி செய்கிறேன் என்று பதில்கள் வழங்கினார். உங்களால் கால அவகாசம் வழங்காவிட்டால் நான் வழங்குகின்றேன். 5/ம் மாதம்2021 சபை கூட்டத்தில் நீங்கள் வரிப்பணத்தை பெற்றிருக்க வேண்டும் அல்லது. அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என உறுதியாக கூறி அல்லது நான் பொது நல வழக்கு பதிவு செய்வேன் என்று சபையில் பதிவு செய்துள்ளேன்.
இந்த மூன்று மாதங்கள் நான் அவகாச கொடுத்தது நகர சபை தலைவர் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பதே. வரிப்பணத்தை செலுத்தாதவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் ஏன் சேவை. துரித கதியில் நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்.