திருகோணமலை பொதுவைத்தியசாலையை இலுப்பைக்குளம் பகுதிக்கு இடமாற்றம் செய்வது தொடர்பாகவும், அதன் முதற்கட்டமாக ஜப்பான் ஜெய்கா நிறுவனத்தினரால் நன்கொடையாக வழங்கப்படவிருக்கும் இருதய சிகிச்சை பிரிவினை அப்பகுதியில் அமைப்பது தொடர்பாகவும் புரிந்துணர்வற்ற நிலைமையும் கருத்து முரன்பாடுகளும் ஏற்பட்டிருந்தது. இதன் விளைவாகவே இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தவர்களும் இருதய சிகிச்சை பிரிவானது பழைய இடத்திலேனும் புதிய இடத்திலேனும் அமைய வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் இடம் மாற்றுவதால் ஜெய்கா நிறுவனத்தினர் நிதி வழங்குவதை நிறுத்திவிடகூடாது என்பதுவே தமது நோக்கம் எனவும் கூறியிருந்தனர்.
பின் வைத்தியசாலை இடம் மாற்றம் செய்யப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டமை, குறித்து முன் வைக்கப்பட்ட ஆரோக்கியமான கேள்விகளுக்கு சரியான முறையிலும், தகுந்த தேவையான அனைத்து பதில்களையும் வைத்திய பணிப்பாளரும் ஆளுநர் அவர்களும் வழங்கியிருந்தனர், கலந்துகொண்டவர்களுக்கு பதில் திருப்தியளித்திருக்கும் என கருதுகின்றேன்.
இலுப்பைக்குளம் பகுதிக்கு வைத்தியசாலை இடமாற்றம் செய்வது குறித்து அவர்கள் உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதை காணமுடிந்தது.
இந்நிகழ்வு முடிவடைந்த பின்னர் மதிப்பிற்குரிய ஆளுநர் அவர்களை சந்தித்து திருகோணமலை நகர அபிவிருத்தி எனும் கருத்திட்டத்தில் ஏற்கனவே என்னால் முன்மொழியப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்துகொண்டேன்.
இவ் விசேடகலந்துரையாடலிற்கும், சந்திப்பிற்குமான முழு ஏற்பாட்டினையும் செய்த வீடமைப்பு அதிகாரசபையின் தலைவரான சகோதரர் ஜெ ஜெனார்த்தனன் அவர்களிற்கு நன்றிகள்.