“திருடப்படும் உர மானியப் பணம்”

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்ற கூட்டத் தொடரில் சுசந்த குமார நவரத்ன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அனுராதபுரம் மாவட்டத்தில் மட்டும் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணத்தில் ரூ.2,934,310 திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு அதிகாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சில விவசாயிகளிடமிருந்து உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விவசாயத் துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.