சிங்கள திரைப்படத்துறையின் பிரபல இயக்குநர் தர்மசேன பதிராஜ நேற்று இரவு காலமானார். கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு இவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள சினிமா உலகில் புரட்சியிணை ஏற்படுத்திய இவர் “சதுரோ கெட்டி” என்ற திரைப்படம் ஊடாக சினிமாத்துறைக்குள் கால்பதித்தார். 1975ஆம் ஆண்டு இவரது தயாரிப்பில் உருவான “லொக்கு லமயக்” திரைப்படமானது மொஸ்கோவில் நடைபெற்ற 9வது சர்வதேச திரைப்பட விழாவில் விருதினையும் பெற்றுக்கொண்டது. கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவரான தர்மசேன பதிராஜ அவுஸ்திரேலியாவின் மொனேஸ் பல்கலைக்கழகத்தில் பெங்காலி சினிமானத் துறையின் கலாநிதி பட்டத்தைப் பெற்றுள்ளார்.