எதிர்வரும் 5ஆம் திகதி இந்த படம் வெளியாகும் நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியது.
இந்த நிலையில், தி கேரள ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரை அறிவுறுத்தியுள்ளது