ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் மாற்றுக்கருத்தாளர்களின் குரவளைகளை நசுக்கப்பட் போது அதற்கு எதிரான குரல்களை வெளியுலகிற்கு கொண்டுவருவதற்கான தளத்தை உருவாக்கி தொடர்ச்சியாக அதில் பயணித்தவர் தோழர் ஜெமினி.
ஊடகவியலாளர்கள் பலரும் வெல்வது போல் தோன்றிய குதிரை மீது பணம் கட்டும் மனப்பான்மை இருந்து போது இன்னும் சொல்லப் போனால் கொல்லுவார்கள் என்று பயத்தினால் தமது சுயத்தை இழந்து பத்திரிகை தர்மத்தை காலில் போட்டு உழக்கிய போது இல்லை உண்மைகளை வெளிக் கொணர்வதற்காக விடாப்பிடியாக செயற்பட்டவர் ஜெமினி.
அவரின் மறைவிற்கு அவருடன் சமகாலத்தில் சூத்திரம் என்ற இணைய வழி மூலமும் பல்வேறு எனைய செயற்பாடுகள் மூலமும் ஜனநாயகத்தை மனித உரிமைகளை நிலை நாட்ட செயற்பட்வர்களுடன்…. செயற்படுபவர்களுடன் இனைந்து அஞ்சலி செலுத்துகின்றோம்.
மரணத்தின் பின்பும் வாழ்வுண்டு வரலாற்றில் சிலர் பேசப்படுவார்கள் இந்த மனித குலத்தின் மீட்சிக்காக தொடர்ந்தும் வாழ்ந்தவர்கள் என்றால் அதில் ஜெமினியிற்கு நிச்சயம் இடம் உண்டும்.
தோழா ஒடுக்கு முறைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்ந்தும் உன் ஆத்மாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாம் உம் எழுதுலகப் போராட்டத்தை தொடர்ந்தும் செய்து கொண்டே இருப்போம். எமது ஆழ் மனத்து அஞ்சலிகள்