அதன்படி, அந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் அதாவது 16, 17 ஆகிய திகதிகளில் அரச விடுமுறை என்பதால், மீதமுள்ள நாட்கள் குறித்து இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இங்கு பாடசாலைகள் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாலும், தொலைதூரத்தில் வசிக்கும் ஆசிரியர்கள் வாக்களிக்க விடுமுறை எடுப்பதாலும், அந்த நாட்களில் பாடசாலைகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படலாம் என்று தேர்தல் ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.