தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் செய்கின்றோம் என்ற போர்வையில், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களின் அழிவுக்கும் யுத்தமீறல் குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூற கோட்டாபய ஆளாகியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை, கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு பற்றி அண்மையில் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்தக் கலந்துரையாடல் தொடர்பாக இன்று (22) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார, கலாசாரம் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றிய தமது எதிர்பார்ப்புகளை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளரின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்ததுடன், அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக ஈரோஸ் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இறுதி முடிவை விரைவில் வெளியிடவுள்ளோம் என்றார்.