பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை தளமாகக் கொண்ட ஒரு போராளி அமைப்பான சிந்துதேஷ் குடியரசு இராணுவத்தின் வீரர்களுக்கு தெஹ்ரான் பயிற்சி அளித்ததாக அந்த ஊடக சந்திப்பில் குற்றஞ்சுமத்தப்பட்டு இருந்தது.
இந்த அமைப்பு கராச்சியில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் தாக்குதலை நடத்திமையால், சர்தார் பஜார் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர் என்று போர்டல் பிளஸ் தெரிவித்துள்ளது.
கராச்சியின் மௌரிபூர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அல்லா டினோ (வயது 28) மற்றும் நவாப் அலி (வயது 26) ஆகிய இருவரும் ஈரானில் பயிற்சி பெற்ற வெடிகுண்டு நிபுணர்கள் என இஸ்லாமாபாத்தின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், சிந்துதேஷ் குடியரசு இராணுவத்தின் தலைவர் அஸ்கர் அலிக்கு ஈரானில் பாதுகாப்பான புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மையை வழங்கிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவுஹானியுடன் தெஹ்ரானில் நடந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளால் ஈரானுக்கு ஏற்பட்ட துன்பத்தை ஒப்புக்கொண்டார்.
2020 நவம்பரில், தென்கிழக்கு ஈரானில் செயல்படும் சலாபி ஜிஹாதிஸ்ட் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவர், கெச்சின் துர்பாத்தில் பாகிஸ்தான் பொலிஸாரால் அவரது இரண்டு மகன்களுடன் கொல்லப்பட்டார்.
பாரசீக நாட்டில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ் அல் அட்ல் என்ற அமைப்புடன் தொடர்புடைய முல்லா ஓமர், ஈரான் காவலர்களை கடத்தி கொலை செய்ததற்காக தேடப்பட்டு வந்தார்.
இதற்காக அவரை கைது செய்ய பாகிஸ்தானின் ஆதரவை தெஹ்ரான் நாடியதாக போர்டல் பிளஸ் மேலும் தெரிவித்துள்ளது.
சுன்னி பெரும்பான்மையான பாகிஸ்தானும் ஷியா ஈரானும் அவர்கள் கடைப்பிடிக்கும் இஸ்லாம் வடிவத்தின் மூலம் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.