(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 07
இலங்கை 1972 மே 22இல் குடியரசாகியதைத் தொடர்ந்து, மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கை,, காணிச் சீர்த்திருத்தமும் தோட்டங்களின் தேசிய மயமாக்கலும் ஆகும். 1972 ஓகஸ்ட் 26ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட காணிச் சீர்திருத்தச் சட்டம், நீண்டகாலப் பாதிப்புகளைக் கொண்டிருந்தது. காணிகளை அரசுடைமையாக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், தோட்டங்கள் தேசிய மயமாக்கல் முக்கியமானதாக இருந்தது.