தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்கா :

1917 – 2014
இலங்கை இனப்பிரச்சினையின் நெருக்கடியான காலத்தில் அன்றைய பிரதமரான S.W.R.D. பண்டாரநாயக்க, தமிழர் தலைவர் என்று அழைக்கப்பட்ட செல்வநாயகத்துடன் சுமுகமான ஒரு தீர்வுக்கு இணங்கிய வேளையில் அதைக் குழப்பும் வகையில் எதிர் கட்சியாக இருந்த வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபராக இருந்த ஜெ.ஆர். ஜெயவர்த்தனா சிங்களவர்களை உசுப்பும் வண்ணம், அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்கு நடந்து செல்லும் யாத்திரை ஒன்றை அறிவித்தார்.

அன்றைய கம்யூனிஸ்ட் கடசியின் உறுப்பினராக இருந்த தோழர் எஸ்.டி .பண்டாரநாயக்கா அந்த யாத்திரையை இடைமறித்து அந்தக் கும்பலை அடித்து விரட்டினார்.

தோழர் சண்முகதாசன் தலைமையில் இயங்கிய அன்றைய சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர்கள் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமைகளுக்கு எதிராக, கட்சியின் துணை அமைப்பான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் உதவியுடன் நடாத்திய ஆலய நுழைவு , தேநீர்கடைகளில் சமஉரிமை போன்ற போராட்டங்களில் தமிழரசுக் கட்சியும் “தந்தை” செல்வாவும் அவரது சகாக்களும் எவ்விதம் சாதிவெறியுடன் இயங்கினார்கள் என்பதையும், தமிழ் எம்.பி களின் சாதிய வன்மத்தையும் போராட்ட களத்தில் நேரே கண்ட தோழர் எஸ்.டி .பண்டாரநாயக்கா இலங்கை பாராளுமன்றத்தில் இவர்களை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

படத்தில்

  1. தோழர். எஸ்.டி .பண்டாரநாயக்கா
  2. சேனநாயக்கா – ஜே ஆர் ஜெயவர்த்தன கண்டி யாத்திரை
  3. தோழர் சண்முகதாசன் – மற்றும் அவரது சகபாடிகள் [ சுன்னாகம்]