தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.”…… என்னும் நூலின் வெளியீட்டு விழா Swiss இல் Zürich என்னும் நகரத்தில் 03.06.2018 அன்று மாலை நடைபெற்றது.
பல்வேறு வகையான சமுக செயற்பாட்டாளர்களும், சமுக ஆவலர்களும் தோழர்களும் இந் நிகழ்வில் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.தோழர் பெர்னாண்டோ அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து தோழர் பத்மபிரபா அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமையேற்று நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி நடத்தினார்.
முன்னாள் போராளியும் , சமகால சமுக செயற்பாட்டாளருமான தோழர்.ரவி (மனிதம்) அவர்களும்,
முன்னாள் போராளியும் , சமகால ஊடகவியளாளருமான திரு.சன் தவராசா அவர்களும் நூலுக்கான விமர்சனங்களை செய்திருந்தனர்.
மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் திரு.ரஞ்சன், சூரிச் தமிழ்ச்சங்கம் சார்பில் திரு.குமார், பிரான்ஸிலருந்து தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) சார்பில் தோழர் ஜோதி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முககியஸ்தர் தோழர் விந்தன் மற்றும் திரு.ராஜன், திரு.பொலிகை ஜெயா, திரு.கல்லாறு சதீஸ், ஆகியோர் உரையாற்றினர்.
EPRLF இன் ஆரம்பகாலச் செயற்பாட்டாளரும் தற்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான தோழர் திலக் அவர்கள் நூலினை வெளியீட்டு வைக்க திருமதி பெனார்ண்டோ அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.அவரைத் தொடர்ந்து ஏனையோரும் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
நூலாசிரியர் தோழர் சுகு சிறிதரன் அவர்கள் தனது நூல் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளித்ததுடன் அதிலுள்ள ஆக்க பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததுடன் இலங்கையின் சமகால அரசியல் நிலவரங்களையும் அவருடைய பேச்சு உள்ளடங்கியிருந்தது.அவருடைய
ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது…