தோழர் பால இலங்கையில் தோழர் சண் தலைமையிலான புதிய செங்கொடி சங்கத்தில் பணியாற்றியவர். 1977இல் விரும்பாது தாயகம் திரும்பியவர்களில் ஒருவர். தமிழகம் சென்றவுடன் தமிழகம் திரும்பிய இலங்கை தொழிலாளர்களுக்காக பணியாற்றிய வேண்டும் எனத்தீர்மானித்து கிளப்பிகூட லிருந்து சென்று இந்திய கம்யூனிஸ கட்சியில் இணைந்து தொழிற்சங்க பணியில் ஈடுபடலானார்.
1986 ஆம் ஆண்டு நான் அவரை கொளப்பள்ளியில் சந்தித்த போது நம்ம ஆட்கள் இங்கு வந்திருக்கவே கூடாது கூறினார். நான் என்னால் முடிந்த வரை தொழிற்சங்கரீதியாக பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கின்றேன் என்றார். இங்குள்ள முதலாளிகள் எம்மக்களை மோசமாக நடத்துகின்றனர் ஏமாத்துகின்றனர். என்றார்.
1998 ஆம் சென்று சந்தித்த வேளை தோழர் இப்ப நம்ம மக்கள் இப்ப திருப்பி அடிக்க தொடங்கி விட்டனர்.இப்போது ஏமாற்ற முடியாது என்றார். 2006ஆம் ஆண்டு இலங்கையில் நான் நடாத்திய சர்வதேசிய தேயிலை தினத்தில் பங்குபற்றி உரையாற்றுகையில் சில தொழிற்சங்ககள் தேயிலை விலை குறைந்தமையினால் சம்பள குறைக்க முதலாளிமார் சங்கத்துடன் இணங்கி கைசாத்திட்டுள்ளனர். ஆனால் நான் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு செய்துள்ளதாக கூறினார்.பின்னர் .இவ்வழக்கில் வெற்றி பெற்ற பின் எனக்கு அறிவித்தார்.
இது இவர் தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்த மாபெரும் வெற்றியாகும். இந்திய உயர் நீதி மன்றம் வழங்கிய சம்பளத்தை ஒருபோதும் குறைக்க முடியாது எனத் தீர்ப்பு வழங்கியது. இது அகில இந்திய தொழிலாளர்களுக்காக பெற்ற வெற்றியாகும்.
இறுதியாக கடந்த மாதம் இணைய வழியாக இவரது குடியகல்வு பற்றி நேர்காணல் செய்தேன்.அப்போது நம்மக்கள் இன்று பாரிய வளர்ச்சியை கண்டுள்ளனர். இந்திய அரச சேவையில் அதி உயர் பதவிகளை வகிக்கின்றனர். ஐஏஎஸ் பதவிகளையும் வகிக்கின்றனர்.ஆனால் மிக சிலரே சமுகத்தினை திரும்பி பார்க்கின்றனர் என்று கவலைப்பட்டார்.
அவரது திடீர் மறைவு கூடலூர் வாழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு பேரிழப்பாகும். எப்போதும் தொழிலாளர்களின் விடுதலைக்காக போராடிய தோழருக்கு எனது செவ் அஞ்சலி