தேர்தலுக்கான முடிவுகளை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. 7621 மொத்த பதவியிடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 4388 இடங்களை கைப்பற்றியுள்ளது.
அத்தோடு திமுக தலைமையிலான கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. 138 நகராட்சிகளில் 132க்கும் மேலான நகராட்சிகளில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.