கமத்தொழில் அமைச்சராக புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர், மஹிந்த அமரவீர, நச்சுத்தன்மையற்ற தேசிய விவசாயி வலையமைப்பின் நச்சுத்தன்யைற்ற விவசாயியாக தன்னை பதிவு செய்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி காரியாலயத்தினால் செயற்படுத்தும் ”நச்சுத்தன்யைற்ற நாடு” தேசிய செயற்திட்டத்தின் முன்னோடிகளிடமிருந்து 2018 மே மாதம் 05 திகதி காலை அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்ட அமைச்சர், அமைச்சரின் அங்கத்துவ விண்ணப்பபத்திரம் நச்சுத்தன்யைற்ற நாடு தேசிய செயற்திட்டம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் (செமா) நிறுவனத்தின் தவிசாளர்,அசோக அபேகுணவர்தனவினால் பதவி முத்திரையிட்டு அனுமதி வழங்கி பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்கு இணைவாக நச்சுத்தன்யைற்ற சேதன விவசாய முறையின் ஆரம்ப நிகழ்வு மே மாதம் மு.ப 9.00 மணிக்கு அமைச்சருக்குரிய அங்குன கொலபெலெஸ்ஸ, யகாகல யாயவில், உள்ள வயல் வெளியில் மேற்கொள்ளப்படவுள்ளது.