நன்கொடையை இரு மடங்காக அதிகரித்தது இந்தியா

அதற்கான  இராஜதந்திர ஆவணங்களும் பரிமாறப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், இத்திட்டத்திற்கான இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீடு 600 மில்லியன் இலங்கை ரூபாவாக அதிகரித்துள்ளது.

2.    குறித்த ஒதுக்கீட்டின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்ட 9 பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உத்தேசிக்கப்படுள்ளது. இவற்றில் மத்திய மாகாணத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் 6 பாடசாலைகளும் ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தில் தலா ஒரு பாடசாலையும் உள்ளடங்குகின்றன.

3.    இலங்கையில் கல்விசார்ந்த  முக்கிய  துறைகளில்  கடந்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், அதேபோல தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி பங்குடைமை  முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நீண்ட பட்டியலில் இந்தத் திட்டம்  இணைந்துகொள்கின்றது. இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தி பங்குடைமை  திட்டங்களில்,  உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உபகரண விநியோகம் ஆகியவற்றுக்கான ஆதரவுக்கு சமமாக, பயிற்சி மற்றும் திறன்-மேம்பாடு ஆகியவையும் முக்கிய கவனத்தை பெறுகின்ற விடயங்களாக காணப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் புனரமைப்புப் பணிகள், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40 இ-நூலகங்களை அமைத்தல், நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு 110 பஸ்களை வழங்கல், நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஆங்கில மொழி ஆய்வகங்களை அமைத்தல், ருஹுண பல்கலைக்கழகத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த கேட்போர் கூடம் உட்பட, நாடு முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் கேட்போர் கூடங்களை புதுப்பித்தல் மற்றும் நிறுவுதல்.

வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையொன்றை நிர்மாணித்தல், மத்திய மாகாணத்தில் ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் வந்தாறுமூலை மற்றும் ஓந்தாச்சிமடம் தொழிற்பயிற்சி நிலையங்கள் போன்ற பல தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு ஆதரவு, தென் மாகாணத்தில் காலியில் 200 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கணனி ஆய்வகங்கள் அமைத்தல், உள்ளிட்டவை இப்பட்டியலில் உள்ளடங்குகின்றன.

இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் முகமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 750 மில்லியன் இந்திய ரூபா பல்துறை நன்கொடை உதவியின் கீழ் STEM பாடங்களுக்கான  3 மாத ஆசிரியர் பயிற்சித் திட்டமும் அண்மையில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply