நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் ஷர்மா ஒளிக்கு 93 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்த நிலையில், 124 பேர் அவருக்கெதிராக வாக்களித்திருந்தார். புதிய எதிரணிப் பிரிவான, பிரதமர் ஷர்மா ஒளியின் ஆளும் கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், புதிய அரசாங்கமொன்றை அமைக்க பாராளுமன்றத்திலுள்ள கட்சிகள் எதிர்பார்க்கின்ற நிலையில், இடைக்கால அரசாங்கமொன்றுக்கு தலைமை தாங்குமாறு பிரதமர் ஷர்மா ஒளியை, நேபாள ஜனாதிபதி பிட்யா தேவி பண்டாரி கோருவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.