ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சியும், சனசமூக நிலையங்களின் செயற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. விளையாட்டு, கல்வி, சுகாதாரம், சமூக ஒருங்கிணைப்பு, சமத்துவ நோக்கு என ஒரு ஆரோக்கியமான சமூகமாக யாழ்ப்பாணம் இருந்தது… இன்று நோய்களும் பெருகி தனியார் வைத்திய நிலையங்களும், தனியார் கல்விநிலயங்களும் நிரம்பிய பிரதேசமாக “வளர்ச்சி” யடைந்துள்ளது…
சுண்ணாகம் நீரில் எண்ணையோ பார உலோகங்களோ இல்லவே இல்லை என என அடித்துக்கூறிக்கொண்டு , இரனைமடு நல்ல நீரை கடலில் பாய்ச்சி பிறகு கடலில் இருந்து உப்பு நீக்கம் செய்ய ஒரு ஆலையை உருவாக்கும் சூழலில் வாழ்ந்துவரும் எமக்கு கட்டுவன் சனசமூகநிலைய இளைஞர்களின் செயற்பாடு ஆச்சரியத்தையும் நம்பிக்கயையும் தந்தது…
எனது நண்பர் தங்கராசா “ஆரோக்யா உணவகம்” என்ற ஒரு உணவகத்தை தெல்லிப்பளை ஆதர வைத்தியசாலைக்கு முன்பாக நடத்திவருகிறார், இலைக்கஞ்சி ,மற்றும் நோயாளர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப இயற்கை உணவுகள் செய்து வழங்குகிறார்…
“கோககோலா மலசல கூடம் கழுவுவதற்கே உரிய பானம்” என கடைக்கு வந்த விற்பனை முகவரிடம் துணிந்து கூறிவிட்டு இளநீரையும் , உடன் பழச்சாறுகளையும் மட்டுமே விற்கிறார்…
நல்ல பொழுது நல்ல விடயம்… நல்ல கிராமங்கள் உருவாகட்டும்…
(Alex Varma)