கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று காற்றின் தர சுட்டெண் 92 – 120 வரை உள்ளதாக என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றின் தர அறிக்கையின்படி, பல நகர்ப்புறங்களில் காற்று சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம் எனவும் அவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது