பட்டுக்கோட்டை மரபு –
கண்ணதாசனின் மரபு –
என்று தனித்துவ நிலைநிறுத்தல்களைத் தாண்டி
வேறு கவிஞர் வரவில்லை….
80கள் வரையில்.
அப்படி வந்து நின்றவர்
வைரமுத்து.
இப்போது நடைபெறுவதும் தொடர்வதும்….
வைரமுத்தின் மரபே.
பின்னோர் பாடலாசிரியர் அதுபோல் நிலைநிற்க வரவில்லை – எனது அறிவில்.
இந்த ஆளை நான் வியக்காத நாள் இன்று
என்று என்னாளையும் சொல்லமுடியவில்லை.
அப்படி இருந்திருந்தால், அன்று நான் திரைப்பாடல் எதையும் கேட்காத நாளாய் இருந்திருக்கும்.
அவர் கவிப்பேரரசா?
யானைமீது குதிரைமீது ஏற்றி ஊர்வலம் கொண்டு செல்ல அவர் படைப்புகள் என்ன கம்பன் காவியமா? அவர் பிறந்தநாளை கவிஞர் தினமென்று கொண்டாடுகிறது இறுமாப்பில்லையா?
இந்தக் கேள்விகளைத் தாண்டித் தவிர்த்துவிட்டு….
வியக்க வைத்த –
மலைக்க வைத்த-
உயரப் பார்க்க வைத்த –
அந்தப் பெருங்கற்பனையாளனின்
கவித்தமிழின் இறக்கைகளுக்கு
என் வியப்பு வணக்கங்கள்.
அவருக்கு என்
பிறந்தநாள் வாழ்த்துகளும்.
(Rathan Chandrasekar)