ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசை விமர்சித்துள்ளார். சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டாலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்
இந் நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் “இஸ்ரேரில் குழந்தைகள், இளைஞர்கள் என பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது” என கூறியுள்ளார்.