இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.
கபூரைத் தேடி புலிகளின் முகாம்களெல்லாம் சென்று குடும்பத்தினர் தேடினார்கள். கிட்டுவின் முகாமிற்குச் சென்று கிட்டுவைக் கேட்டபோது கபூர் தங்களிடம் இல்லை என்று கிட்டு கூறிவிட்டார். கபூரின் இளைய சகோதரர் ரவீந்திரன் ஹாட்லிக் கல்லூரி விஞ்ஞானபீட உயர்தர வகுப்பு மாணவன். கல்வியில் நல்ல கெட்டிக்காரன். மாணவர் அமைப்பில் இருந்தார். ஈபிஆர்எல்எஃப் அமைப்பிலும் செயற்பாட்டாளராக இருந்தார். உயர்தர வகுப்புப் பரீட்சை முடித்துவிட்டு பரீட்சை முடிவுகளுக்காக ரவீந்திரன் காத்திருந்தார்.
கபூர் குடும்பம் புலிகள் இயக்க உறுப்பினரான் தயா மாஸ்டருக்கு உறவுக்காரர்கள். ரவீந்திரனைக் கொல்ல புலிகள் திட்டமிட்டுள்ளார்கள் எங்காவது தப்பிச் செல்லும்படி என்று ரவீந்திரன் குடும்பத்துக்கு தயா மாஸ்டர் எச்சரித்திருந்தார். மறுநாள் எங்காவது தப்பிச் செல்லலாம் என்று ரவீந்திரன் திட்டமிட்டிருந்த வேளை புலிகள் முந்திக் கொண்டனர். ரவீந்திரன் அவரின் வீட்டில் வைத்தே புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயர்தர வகுப்பு பரீட்சை முடிவுகள் சில நாட்களில் வந்தபோது ரவீந்திரன் நான்கு பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்று பேராதனைப் பல்கலைக்கழத்தில் மருத்துவ பீட மாணவனாக தெரிவு செய்யபட்டிருந்தார். ஆனால் ரவீந்திரனின் உயிரைப் புலிகள் காவு கொண்டு விட்டனர். இன்று விழுந்து கட்டி தமிழினிக்கு அஞ்சலி செய்யும் கூட்டத்துக்கு ரவீந்திரன் போன்ற எத்தனை பேரை. எத்தனை பெண்களின் வாழ்க்கையை அழித்த புலிகள் இயக்க உறுப்பினர்தான் தமிழனி என்று.