அதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை(16) பாடசாலை அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , திங்கட்கிழமை (17) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் போது , பாடசாலையில் மேலதிக வகுப்பு நடாத்தியதாகவும் , அதன் போது , ஒரு விடயத்தை மூன்று தரம் விளங்கப்படுத்தியும் மாணவியால் விளங்கிக்கொள்ள முடியாது, தவறிழைத்தமையால் , நிதானம் இழந்து , மாணவியை அடித்தேன் என மன்றில் கூறினார்.
அதனை அடுத்து , நிதானம் இழப்பதும் ஒரு வகை நோயே , அதற்கு உளவியல் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்திய நீதவான் , 05 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அதிபரை அனுமதித்து, வழக்கினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை , மாணவியை தாக்கிய அன்றைய தினம் ,குறித்த மாணவி உள்ளிட்ட 09 மாணவிகளை அதிபர் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.