சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலின் கடுமையை, அது உலகெங்கும் பரவும்முன், நிறுவனம் மூடிமறைத்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என்றும் இருப்பினும், அமெரிக்காவின் பெருந்தன்மையை நிறுவனம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்கிறதா என்பதுகுறித்த கவலை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனம் சீனாவிற்கு விரைவாக வல்லுநர் குழுவை அனுப்பியிருந்தால் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.