ஆஸ்திரேலிய மற்றும் பசிபிக் நிலைத்தட்டு சந்திப்பில் அதிக தீவிரமான நிலைமைகள் காணப்படுவதால், ஆஸ்திரேலிய தட்டின் கிழக்கு பகுதி உலகின் மிக அதிக நில அதிர்வுகள் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நியூசிலாந்தில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் 1931ஆம் ஆண்டில் ஏற்பட்டது. ஹாக்ஸ் பே பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக மதிப்பீடு செய்யப்பட்டு, 256 உயிரிழப்புகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.