வெள்ளை மாளிகைக்குள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி நுழையும்போது பைடனுக்கு 78 வயதாகும் நிலையில், ஐ. அமெரிக்காவில் பதவியேற்கும் வயது கூடிய ஜனாதிபதியாவார். இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும்போது அவருக்கு 70 வயது என்ற நிலையில் அவரே வயது கூடிய ஜனாதிபதியாக பதவியேற்றவராகக் காணப்பட்டிருந்தார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராவதற்கு 1988, 2008ஆம் ஆண்டுகளிலும் பைடன் முயன்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செனட்டுக்கு 29ஆவது வயதில் 1972ஆம் ஆண்டு டெலவெயாரிலிருந்து பைடன் தேர்வு செய்யப்பட்டிருந்ததுடன், 2009ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை பராக் ஒபாமாவின் கீழ் உப ஜனாதிபதியாகப் பணியாற்றும் வரையில் 36 ஆண்டுகள் செனட்டராகவிருந்தார்.