சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விசேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கணேமுல்ல சஞ்சீவ இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
அளுத்கடை நீதவான் நீதிமன்றக் கூண்டில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவவின் இதயத்தை ஊடுருவிச் சென்று அவரது உடலில் நுழைந்த ஒரு தோட்டாவின் துண்டு, இன்று (20) திறந்த நீதிமன்றத்தில் அரசாங்க பகுப்பாய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சஞ்சீவா நின்றுக்கொண்டிருந்த கூண்டில் இருந்த மரக் கம்பத்தில் ஒரு துளை தோண்டிய பொலிஸ் அதிகாரிகள், அதில் ஒன்றரை அங்குலம் ஆழமாகப் பதிந்திருந்த தோட்டா துண்டை மீட்டெடுத்து, மேலதிக விசாரணைக்காக அரசாங்க பகுப்பாய்வாளர்கள் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.