இந்நிலையில், தற்போதைய கொரோனா அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு, குறித்த பொங்கல் விழாவில், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, 10 பேர் மாத்திரம் கலந்துகொள்வதற்கு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் அனுமதியளித்துள்ளது.
அதாவது, நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியசேவைகள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, 10 பேரை மட்டும் உள்ளடக்கியதாக கோவில் கிரியைகளை எளிமையான முறையில், சமூக சுகாதார இடைவெளிகளைப் பின்பற்றி, 12ஆம் திகதி மாலை தொடக்கம் 13ஆம் திகதி மாலை வரை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்துக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.