இடதுசாரி பசுமைக் கட்சி மாபெரும் வெற்றி ஈட்டியுள்ளது. தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் அதுவே பெரிய கட்சி. அதே நேரம், வலதுசாரி அரசியல் நடத்திய போலி இடதுசாரி தொழிற்கட்சி (PvdA) படுதோல்வி அடைந்துள்ளது. இவ்வளவு காலமும் பெரிய ஆளும் கட்சிகளில் ஒன்றாக இருந்தது. வெறும் 9 ஆசனங்களை மட்டும் எடுத்துள்ளது. இது ஒரு வரலாற்றுத் தோல்வி ஆகும். புதிய இடதுசாரிக் கட்சியான Groen Links (பசுமை இடது), கடந்த தேர்தலை விட 10 ஆசனங்கள் அதிகமாகப் பெற்றுள்ளது. அது1992 ம் ஆண்டு உருவான நவீன இடதுசாரிக் கட்சி ஆகும். பழைய கம்யூனிஸ்ட் கட்சி (CPN), மற்றும் இரண்டு முற்போக்கு கட்சிகள் சேர்ந்து உருவாக்கின.