நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாள எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் இன்று (07) காலை 7.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 06.50 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. இந்த நில அதிர்வின் தாக்கம்  பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. 

Leave a Reply