நேபாளத்தில் மழையில் பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியது

இதற்கிடையே, கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை நீடிப்பதால் கத்மண்டுவில் ஓடும் பாக்ரி நதியில் அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தலைநகர் கத்மண்டுவில் 48 பேர் பலியாகினர்.

இந்நிலையில், நேபாளத்தில் இதுவரை கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. 42 பேர் மாயமாகி உள்ளனர். 111 பேர் காயமடைந்துள்ளனர்.