பாராளுமன்றத்தைக் கடந்த மாதம் கலைத்து முற்கூட்டியே பொதுத் தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே பிரதர் ஷர்மா ஒளி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட போதும் இடைக்காலப் பிரதமர் ஷர்மா ஒளி நீடிக்கின்றார்.
பாராளுமன்றத்தைக் கலைத்து, முற்கூட்டி தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுத்தது சட்டரீதியானதா அல்லது அரசமைப்பு முரணானதா என சுயாதீன வழக்கறிஞர்கள், பிரதமர் ஷர்மா ஒளியின் எதிரணியினரின் 12க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து வரும் நேபாள உச்ச நீதிமன்றம், அடுத்த மாதம் தனது தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.