நியாமேவில் ஒன்று கூடிய மக்களை விரட்டியடிக்க இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. 1960-ம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து நைஜர் விடுதலை அடைந்த காலம் முதல் அரசியல் வன்முறைகளால் அந்நாடு சீர்குலைந்து போனது. இதற்கு முன்னர் 4 முறை ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
2010-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி Mamadou Tandja தலைமையிலான ஆட்சியை இராணுவம் தூக்கி எறிந்தது. 2021-ம் ஆண்டு முதல் அதிபராக முகமது பாசும் பதவியில் இருந்து வருகிறார். ஜிஹாதிகளின் ஆயுத கிளர்ச்சியையும் அண்மைக் காலமாக நைஜர் நாடு எதிர்கொண்டு வந்தது. தலைநகர் நியாமேவில் இருந்து 100 கிமீ தொலைவில்தான் அல் குவைதா மற்றும் ஐஎஸ் ஆதரவு பெற்ற ஜிஹாதிகளுக்கு இடையேயான மோதல் நடைபெற்றும் வருகிறது. நைஜர் நாட்டின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஐநா சபை, ஆப்பிரிக்கா ஒன்றியம் உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.