பங்களாதேஷில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என இந்துக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும், இந்துக்கள் மீது குறி வைத்து தாக்கப்படுவதால் அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் தேடி வருவதாகவும் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐநா உதவி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவில் சுமார் மூன்று இலட்சம் பேர் கையெழுத்துள்ளதை அடுத்து ஐநா மனித உரிமை பேரவை இந்த மனு மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது குறிப்பாக இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருவதாகவும் அதற்கான சாட்சிகளை ஐநா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்