பங்களாதேசில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு முறையை இரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேசில் கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மாபெரும் போர் நடந்தது. இந்த போரில் ஏராளமானோர் நாட்டுக்காக உயிரிழந்தனர். இந்த போரில் வெற்றிகளாதேஷ் தனி நாடாக உருவானது.