ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பிக்களில் ஒருவர், தன்னுடைய இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். தேசியப் பட்டியல் எம்.பியான ஜயந்த கெட்டகொடவே தன்னுடைய இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். அதனை பாராளுமன்ற செயலாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், பசில் ராஜபக்ஷ, தேசியப் பட்டியலின் ஊடாக, பாராளுமன்றத்துக்கு வருகைதருவதற்கு வழிசமைக்கும் வகையிலேயே இவர், இராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும், பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதனை நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நேற்று (05)
உறுதிப்படுத்தினார். பங்காளி கட்சிகளின் தலைவர்கள் வசமுள்ள பதவிகள் திட்டமிட்ட வகையில் பறிக்கப்படுகின்றன.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த உர நிறுவனம், அடிப்படை காரணங்கள் எவையுமின்றி விவசாயத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.. “கூட்டணி என்பதற்காக தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. பொதுஜன
பெரமுனவின் உறுப்பினர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் பங்காளி
கட்சிகளை புறக்கணிக்கும் வகையிலேயே உள்ளன” என்றார்.
“வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரிவசம் செயற்பட்ட விதம் அடிப்படையற்றது” என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இதன்போது தெரிவித்தார்.