‘பசுமை புரட்சியினூடான வறுமை ஒழிப்பு’

அம்பாறை மாவட்டத்தில் கற்றாழை பயிர்செய்கை வீட்டுத் தோட்டமாக அறிமுகமாக்கும் திட்டம் தொடர்பாக நேற்று (23) அக்கரைப்பற்று 06ஆம் கட்டையில் அமைந்துள்ள கற்றாழைப் பயிர்ச்செய்கை திட்ட முகாமையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் ஆலோசனைக்கமைய, முதல் முதலாக அம்பாறை மாவட்டத்தில் பரீட்சாத்தமாக கற்றாழைச் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதனூடாக மாவட்டத்தில் 50 ஆயிரம் சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

“இக்காற்றாளை பயிர் செய்கையை ஒவ்வொரு பயனாளிகளும் தனது வீட்டுத் தோட்டத்தில் 05 பேர்ச்சஸ் காணியில் ஆரம்பித்து மாதாந்த வருமானமாக 25 ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொள்ள முடியும்.

“இப்பயிர்ச்செய்கையினூடாக வருடம் ஒன்றுக்கு 15 பில்லியன் விவசாய உற்பத்தியாகவும் மற்றும் 80 பில்லியன் கற்றாழை பொருட்கள் உற்பத்தியினூடாகவும் மொத்த தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்ய முடியும்.

“இக் கற்றாழை பயிர்ச்செய்கை மூலம் பயணாளிகள் கூடிய வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்குரிய வழி வகைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது வாழ்வை நாம் சீராக கொண்டு செல்ல முடியும்.

“இலங்கையில் தற்போது கற்றாழை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களும் மற்றும் எதிர்காலத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாமென கேட்டுள்ளார்.