மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட இந்த உரையாடல் அரங்கில் தற்போதைய இலங்கையின் கல்வி முறைமையில் உள்ள பிரைச்சினைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடா்பாக உரையாடப்பட்டது. அரசியல் சமூக செயற்பாட்டாளரான நியூட்டன் மரியநாயகம் அவர்கள் இக் கருத்தரங்கின்ஒழுங்கமைப்பாளராகவும் வளவாளராகவும் பங்கேற்றிருந்தார்.
பத்மநாபா அறிவாற்றல் கழகம் ஏற்பாடு செய்த மற்றொரு கருத்தரங்கு நேற்று முன்தினம் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போது சமூகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள், சவால்கள், கரிசனைகள்: தொடர்பாக ஆராய்ந்துஇளைஞர் யுவதிகளிடையே தன்நம்பிக்கையை, சுய ஆளுமையை விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக பத்மநாபா அறிவாற்றல் கழகம் குறிப்பிட்டுள்ளது சமூகத்தில் காணப்படும் மிக இளவயது திருமணம், தற்கொலை உணர்வு, போதைப்பொருள் பாவனை, தலைமைத்துவ இடைவெளி போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் குறித்து சமூகத்தின் மத்தியில் உரையாடல்கள் வேண்டும் என்ற சமூக அக்கறை கொண்டவர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க இக் கருத்தரங்கு தொடர் ஆகஸ்ட் 24, 25, 26, 27 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.