பனைமரம் எங்கள் மண்ணின் வளம்

பசுமையை நிகழ்காலத்தில் பாதுகாக்க வேண்டும் நாளைய தலைமுறையில் அழகான ஆரோக்கியமான வாழ்வுக்காக என்ற கனவோடு…

பனைமரம் எங்கள் மண்ணின் வளம் ஒவ்வொரு நாளும் அளவுக்கு அதிகமாக பனை மரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.எங்கள் அமைப்பின் ஊடாகவும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பனை விதைப்பை மேற்கொண்டு வருகிறோம் எங்களால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை தொடர்ந்து முயற்சி செய்கிறோம்…

வருகின்ற 28-10-2023 அன்று மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான பனை விதைகளை விதைப்பதற்காக தயார்படுத்தி உள்ளோம் அன்றைய நிகழ்வில் சில மணித்தியாலங்கள் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கிறோம் நாளைய தலைமுறையின் பசுமையான வாழ்வுக்காக.

நீங்கள் கலந்து கொள்வதால் உங்கள் பசுமை சார்ந்த உணர்வுகளையும் விழிப்புணர்வாக கடத்த முடியும் இன்றைய தலைமுறைக்கு நாளைய தலைமுறையின் வாழ்வுக்காக… முடிந்தவரை கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களால் கலந்து கொள்ள முடியாவிட்டால் உங்கள் முகநூலில் இருப்பவர்கள் அறிந்து கொண்டு கலந்து கொள்வதற்காக வருகின்ற 28 ஆம் தேதி நாங்கள் பனை விதைப்பை செய்கிறோம் என்பதை உங்களுடைய சிந்தனையோடு ஒரு பதிவை உங்கள் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

காரணம் நீங்கள் பதிவு செய்வதால் உங்கள் முகநூலில் இருந்து 10 நண்பர்கள் கலந்து கொண்டாலும் அது எங்களுக்கு மிகப்பெரிய பலத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். மேலும் இந்தத் தடவை மிகவும் அளவுக்கதிகமாக பல ஆயிரக்கணக்கான விதைகளை சேகரித்து வைத்திருக்கிறோம் அதனால் பல கைகளின் உதவிகளை எதிர்பார்க்கிறோம்.

ஒரே தடவையில் விதைப்பதற்காக வருகின்ற 28-10-2023 அன்று… மிக நீண்ட பசுமையின் கனவுகளை பல ஆண்டுகாலாக சுமந்து பயணித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு உங்களுடைய ஆதரவையும் அனுசரணையும் தாருங்கள் நாளைய தலைமுறைக்காக… உங்கள் பசுமை சகோதரனாக உங்களிடம் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்…

தரன் ஸ்ரீ💐💐💐

ஸ்தாபகர்

வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்…