இந்நிலையில், சபரிமலையிலும் கடந்த இரு தினங்களாக அடைமழை பெய்துவருகிறது. மழையை பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், பம்பை ஆற்றில் இறங்கும் போது, பக்தர்கள் எச்சரிக்கையுடன் இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வனப்பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் பம்பை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பம்பை ஆற்றின் இருபுற கரைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.