ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில், ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
“அவசியமற்ற சில விடயங்கள் அந்த அறிக்கையில் இந்த தருணத்தில் காணப்படுவதாக நாங்கள் கருதுகின்றோம் எங்களுக்கு அவதூறு கற்பிக்கமுனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாங்கள் அமைதியாகவும் ஸ்திரதன்மை மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம்” என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தீர்மானித்ததும் அதனை பகிரங்கப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.